பொது செய்தி

தமிழ்நாடு

டிச.13ல் போலீஸ் தேர்வு ராமநாதபுரத்தில் 15,509 பேர்

Added : டிச 08, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : டிச.,13ல் நடக்கும் போலீஸ், சிறைக்காவலர்,தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் 15 ஆயிரத்து 509 பேர் எழுதுகின்றனர். எஸ்.பி., கார்த்திக் கூறியிருப்பதாவது:இரண்டாம் நிலை போலீசார், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு டிச.,13ல் நடக்கிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில்,

ராமநாதபுரம் : டிச.,13ல் நடக்கும் போலீஸ், சிறைக்காவலர்,தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் 15 ஆயிரத்து 509 பேர் எழுதுகின்றனர்.

எஸ்.பி., கார்த்திக் கூறியிருப்பதாவது:இரண்டாம் நிலை போலீசார், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு டிச.,13ல் நடக்கிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, சேதுபதி அரசு கலை அறிவியல் கல்லுாரி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. கீழக்கரை முகமது சதக்பொறியியல் கல்லுாரி, முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி, செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரி, தாஸிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி, பரமக்குடி ஆயிர வைஸ்யா மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, கமுதக்குடி மவுன்ட் லிட்ரா பள்ளி ஆகிய 13 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.இங்கு 15 ஆயிரத்து 509 பேர் தேர்வு எழுதுகின்றனர். விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதம் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினியுடன் காலை 9:00 மணிக்கு முன் தேர்வு மையங்களில் ஆஜராக வேண்டும். தாமதமாக வந்தால் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.அலைபேசி, கால்குலேட்டருக்கு அனுமதி இல்லை.அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு மை பந்து முனை பேனா, தேர்வு அட்டை தவிர வேறு எதுவும் கொண்டுவர அனுமதி இல்லை.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X