பீஜிங்:நம் அண்டை நாடுகளான, சீனா மற்றும் நேபாளம் கூட்டாக நடத்திய ஆய்வில், எவரெஸ்ட் மலைச் சிகரம், 86 செ.மீ., உயர்ந்துள்ளது. அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர்.
இந்தியாவின் வடக்கே உள்ள இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம், உலகிலேயே மிகவும் உயர்ந்த மலைசிகரமாக உள்ளது.கடந்த, 1954ல், இந்தியா நடத்திய ஆய்வில், இதன் உயரம், 8,848மீட்டர் என, தெரியவந்தது.இந்நிலையில், பல்வேறு இயற்கை மாற்றங்கள் மற்றும் 2015ல் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்பாதிக்கப்பட்டிருக்கலாம் என, கருதப்பட்டது.இதையடுத்து, சீனா மற்றும் நேபாளம் இணைந்து கூட்டாக, உயரத்தை அளவிடும் பணியை துவக்கின. புதிய உயரத்தை, சீனா மற்றும் நேபாளம் அறிவித்துள்ளன.
இதன்படி, அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர்.ஏற்கனவே, இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்த அளவை விட, தற்போது, 86 செ.மீ., அதிகரித்துள்ளது.சீனா இதற்கு முன், இரண்டு முறை,எவரெஸ்டின் உயரத்தை அளந்துள்ளது. கடந்த, 1975 ஆய்வின்படி, 8,848.13மீட்டராகவும், கடந்த, 2005ல் நடத்திய ஆய்வின்படி, 8,844.43 மீட்டராகவும் அறிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE