சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவு அளிக்கப்பட்டது.
சிதம்பரம் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் பாதித்த மக்களை முகாம்களில் தங்க வைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்குகின்றனர். பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பிலும் உணவு அளிக்கின்றனர். சிதம்பரம் முத்து மாணிக்க நாடார் தெரு, நந்தவனம், சுவாதிநகர், மீதிக்குடி, கிள்ளை, அம்மாபேட்டை, கோணங்குளம் பகுதிகளில் 1500 பேருக்கு ஆதிபராசக்தி இயக்கம் சார்பில் பேராசிரியர் ஞானகுமார், அவதார் தொண்டு நிறுவனர் பாலசுந்தரம், டாக்டர் அர்ச்சுணன் ஆகியோர் உணவு வழங்கினர்.
சிதம்பரத்தில் நகர த.மா.கா., சார்பில் ஒட்டர் மலைவாழ் மக்கள் சுமார் 300 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான நிவாரண பொருட்களை நகர தலைவர் மக்கின் தலைமையில் டி.எஸ்.பி., லாமேக் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE