நியூயார்க்:'உலக நாடுகள் ஒன்றிணைந்து, எதிர்காலத்தில் தோன்றும் புதிய தொற்று நோய்களை சமாளிக்க, நீண்ட கால செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்' என, ஐ.நா.,வில் இந்தியா
வலியுறுத்தியுள்ளது.
தடுப்பூசி
ஐ.நா.,வுக்கான
இந்திய துாதரகக் குழு ஆலோசகர் பிரதிக் மாத்துார், ஐ.நா., பொதுச்
சபையில்,
'சர்வதேச ஆரோக்கியம் மற்றும் வெளியுறவுக் கொள்கை'
குறித்து பேசியதாவது: சர்வதேச ஆரோக்கிய பராமரிப்பு கட்டமைப்பில் உள்ள பலவீனத்தை, கொரோனா தொற்று நோய்,
எடுத்துக் காட்டிஉள்ளது.எதிர்காலத்தில், இதுபோன்ற புதிய தொற்று நோய்களின்
அச்சுறுத்தல்களைசமாளிக்க, தயாராக இருக்க வேண்டும்.
இதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து, நீண்ட கால செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
அனைத்து
நாடுகளுக்கும் நியாயமான விலையில் மருந்துகள், பரிசோதனைகள்,
மருத்துவ சிகிச்சைகள், தடுப்பூசி மருந்துகள், புதிய
தொழில்நுட்பங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.அதற்கான தடைகளை, உலக வர்த்தக அமைப்பின், 'டிரிப்ஸ்' ஒப்பந்தம் மற்றும் தோகா பிரகடனம் வாயிலாக, தகர்த்தெறிய வேண்டும்.
நடவடிக்கை
தற்போது, 'கோவாக்சின்' திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் வளரும் நாடுகளிடையே பார
பட்சமின்றி, கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்களின் கட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டும்.இந்தியா,
150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தொடர்பான மருந்துகள்,
மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது.இந்தியா, நான்கு அம்ச திட்டத்தின் அடிப்படையில், தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.
'அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி காண்போம்' என்பதே இந்தியாவின் கொள்கை. இதில் ஒருவரைக் கூட பின்தங்க விடாமல், முன்னேற்ற, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE