ராமல்லா:மேற்காசிய
நாடான பாலஸ்தீனத்தில், தொழில்நுட்ப பூங்கா கட்டுவதற்காக, இந்தியா
வழங்கும் உதவி தொகையின் கடைசி தவணையான, 22.50 கோடி ரூபாய்,வழங்கப்பட்டது.
மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தில், பல வளர்ச்சி
திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, இரு நாடுகளுக்கு இடையே,
இருதரப்பு புரிந்துணர்வு உதவி திட்டம், 2016ல் கையெழுத்தானது. இத் திட்டத்தின்
கீழ், 215 படுக்கை வசதிகளை உடைய பல்நோக்கு மருத்துவமனை,
தொழில்நுட்ப பூங்கா, துாதரக பணியாளர்கள் பயிற்சி நிலையம், மூன்று
பள்ளிகள் உள்ளிட்டவைகளை
கட்டித்தர, 442 கோடி ரூபாய் உதவி தொகையை,
இந்தியா அளிக்கிறது.
அதன் ஒருபகுதியாக, தலைநகர் ராமல்லாவில்,
தொழில்நுட்ப பூங்கா அமைக்க, இந்திய அரசு, 90 கோடி ரூபாய் அளிக்கிறது.
இந்த உதவி தொகையின் கடைசி தவணையான, 22.50 கோடி ரூபாய்,
வழங்கப்பட்டது.அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் டாக்டர் மஜ்தி
அல்கால்தியிடம், 22.50 கோடி ரூபாய்க்கான காசோலையை, இந்திய
பிரதிநிதி சுனில் குமார் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE