உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே முன்விரோத தகராறில் போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 40; அதே ஊரைச் சேர்ந்தவர் தாஸ், 48; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். விஜய் கொடுத்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார், தாஸ், பெரியநாயகம், ஆசம்மாள், இளங்கன்னி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து தாசை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE