திண்டிவனம் : திண்டிவனத்தில் இறந்து கிடந்த புள்ளி மானின் உடலை, வனத்துறையினர் மீட்டு அடக்கம் செய்தனர்.
திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் நேற்று காலை புள்ளிமான் ஒன்று ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது.தகவல் அறிந்தவுடன் ரோஷணை தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமானை கைப்பற்றி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.திண்டிவனம் வனச்சரக அலுவலர் தர்மலிங்கம் உத்தரவின்பேரில் வனவர் பாலசுந்தரம் மற்றும் வனக்காப்பாளர்கள் ஏழுமலை, ராகவன், முருகன் ஆகியோர் இறந்து கிடந்த புள்ளி மானை மீட்டு, கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், நேற்று இரவு இறந்த புள்ளி மானை, நாய்கள் துரத்திச்சென்று கடித்ததால், ஓடும் போது சுவற்றில் மோதி உயிரிழதந்து என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE