கள்ளக்குறிச்சி : நீலமங்களம் கூட்ரோடு நரிக்குறவர் காலனி பகுதியில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும்மாற்றுத் திறனாளி மாணவர்கள் கணக்கெடுப்பு பணியை சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத் திறனாளி மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி சில தினங்களாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா மாணவர்கள் 71, மாற்றுதிறனாளிகள் 20 என 91 பேர் நேற்று முன்தினம் வரை கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.நீலமங்கலம் கூட்ரோட்டில் வசிக்கும் நரிகுறவர் பகுதியில், கணக்கெடுப்பு பணி நேற்று நடந்தது.
வட்டாரக் கல்வி அலுவலர் செலின்மேரி, மேற்பார்வையாளர் கோவிந்தராஜூ, ஒருங்கிணைப் பாளர்கள் திருமுருகன், பெரியசாமி ஆகியோர் மேற்பார்வையில் நடந்த இப்பணியில், பள்ளி செல்லா மாணவர்கள் 4 பேர் கண்டறியப்பட்டனர்.இந்த பணியினை கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா நேற்று ஆய்வு செய்து, 4 மாணவர்களையும் அரசு துவக்கபள்ளியில் சேர்த்து, சீருடை, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.தொடர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று, கல்வி தொலைக்காட்சியை குழந்தைகளுக்கு தினமும் காண்பிக்கும்படி, பெற்றோர்களிடம் அறிவுறுத்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி உட்பட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE