திருப்பதி:ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷன் அருகில், தண்டவாளத்தில் குண்டு வெடித்தது குறித்து, போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷன் அருகில், ரயில்
தண்டவாளத்தின் மீது, நேற்று காலை ஒரு பெட்டி கேட்பாரற்று கிடந்தது.அந்த
வழியாக ஆடு, மாடு மேய்த்துச் சென்ற சசிகலா என்ற பெண், அந்த பெட்டியை
பார்த்து, அதை எடுக்க முயன்றார். திடீரென அந்த பெட்டிவெடித்துச் சிதறியது.
இதில், சசிகலாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டு,
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.காயமடைந்த சசிகலாவை மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ரயில் தண்டவாளத்தின் மீது வெடி பொருள் அடங்கிய பெட்டியை
யார் வைத்தது, அதில் எந்த மாதிரியான வெடி பொருட்கள் இருந்தன என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE