ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின், 21 மாவட்டங்களில் உள்ள, 4,371 கிராம பஞ்சாயத்து மற்றும், 636 மாவட்ட
பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான தேர்தல், நான்கு கட்டங்களாக சமீபத்தில் நடந்தது.
இதன்
ஓட்டு எண்ணிக்கை நேற்று துவங்கியது. கிராம பஞ்சாயத்து தேர்தலில்,
நேற்று மாலை நிலவரப்படி, 1,554 இடங்களில், பா.ஜ., வெற்றி
பெற்றுள்ளது. காங்கிரஸ், 1,440 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள், 371 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள, 636 மாவட்ட பஞ்சாயத்துகளில், 111 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், பா.ஜ., 61 இடங்களிலும், காங்கிரஸ், 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.பெரும்பாலான
மாவட்ட பஞ்சாயத்துகளில், பா.ஜ., முன்னிலை வகிப்பதாக தகவல்
வெளியாகி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE