பொது செய்தி

தமிழ்நாடு

வீடூர் அணையில் கலெக்டர் ஆய்வு

Added : டிச 08, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி : வீடூர் அணை முழு கொள்ளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி நான்காவது நாளாக உபரி நீர் திறந்துவிடப்படுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை புரெவி புயல் காரணமாக பெய்த மழையினால் கடந்த 5ம் தேதி அணை முழு கொள்ளவான 32 அடி(605 மில்லியன் கன அடி)யை எட்டியது. அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வரும்

விக்கிரவாண்டி : வீடூர் அணை முழு கொள்ளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி நான்காவது நாளாக உபரி நீர் திறந்துவிடப்படுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை புரெவி புயல் காரணமாக பெய்த மழையினால் கடந்த 5ம் தேதி அணை முழு கொள்ளவான 32 அடி(605 மில்லியன் கன அடி)யை எட்டியது. அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீரை கண்காணித்து நீர் வரத்து நிலவரப்படி பொதுப்பணித்துறைஅதிகாரிகள் உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர்.நேற்று நான்காவது நாளாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 400 கன அடி நீர் வரத்து வந்தது. அதே அளவு உபரி நீ ரை அணையிலிருந்து மூன்று கதவுகள் மூலம் வெளியேற்றினர்.

அணையிலிருந்து உபரி நீர் வெளியேறுவதை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு, நீர் வரத்து நிலவரம், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உதவி பொறியாளர் செல்வியிடம் கேட்டறிந்தார்.செயற்பொறியாளர் ஜவகர் தலைமையில் உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர்கள் ஞானசேகரன் , செல்வி, தேவி மற்றும் வருவாய்துறை, காவல் துறை, தீயணைப்பு துறையினர் அணையில் முகாமிட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X