விழுப்புரம் : விழுப்புரத்தில் வி.சி., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம், கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, பொருளாளர் பிரின்ஸ் சோமு முன்னிலை வகித்தனர். ரவிக்குமார் எம்.பி., மாவட்ட துணைச் செயலாளர் இரணியன், வழக்கறிஞர்கள் செந்தில்குமார், நாராயணசாமி, இளமாறன், வளவன், விடுதலைச் செல்வன், பெரியார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., மைனாரிட்டி மாணவர் களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலஷிப் திட்டத்தைக் கைவிடக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வழக்கறிஞர் சரவணன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE