பொது செய்தி

தமிழ்நாடு

அத்தி வரதர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் குளம் நிரம்பியது

Added : டிச 08, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் குளம், ஐந்தாண்டுகளுக்கு பின், முழுமையாக நிரம்பியது.காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும், தொன்மையான வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், முதலில், மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த வரதர் சிலை, அத்தி மரத்தால் செய்யப்பட்டது.பின்னாளில், கருங்கற்களால்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் குளம், ஐந்தாண்டுகளுக்கு பின், முழுமையாக நிரம்பியது.

காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும், தொன்மையான வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், முதலில், மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த வரதர் சிலை, அத்தி மரத்தால் செய்யப்பட்டது.பின்னாளில், கருங்கற்களால் ஆன பெருமாள் விக்ரஹம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.இதனால், பழைய அத்தி வரதர் சிலை, கோவில் வளாக அனந்தசரஸ் குளத்தில், நீராழி மண்டபத்தினுள் வைக்கப்பட்டது.

எனினும், 40 ஆண்டு களுக்கு ஒருமுறை, தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்து, அத்தி வரத ருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.அந்த வைபவம், கடந்தாண்டு, 48 நாட்கள் கோலாகலமாக நடத்தப்பட்டு, மீண்டும் அனந்த சரஸ் குளத்தில், அத்தி வரதர் சிலை வைக்கப்பட்டது.

இந்நிலையில், கன மழை காரணமாக, அத்தி வரதர் வீற்றிருக்கும் குளத்தில், நீராழி மண்டபம் மேல்தளம் வரை, தண்ணீர் நிரம்பி உள்ளது.கடந்த, 2015ல் பெய்த கன மழைக்கு பின், தற்போது தான், இந்தக் குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.தொடர் மழையால், இந்தக் குளம் நிரம்பி, வெளியேறும் நீர், கிழக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள, பொற்றாமரைக் குளத்திற்கு செல்லும்; அந்த குளமும் நிரம்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X