துளசி வாச சீரக சம்பா நெல் சாகுபடி குறித்து, காஞ்சி புரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எஸ்.சண்முகம் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், துளசி வாச சீரக சம்பாவும் ஒன்று. இந்த நெல், 135 நாட்களில் அறுவடைக்கு வரும்.கூடுதல் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யும்போது, ஐந்து நாட்களுக்கு முன்னதாக அறுவடைக்கு வந்துவிடும்.
குறிப்பாக, துளசி வாச சீரக சம்பா நெல் மணி நுனியில், இருபுறமும், கறுப்பு நிற இரு புள்ளிகள் தென்படும். அந்த புள்ளிகளே, துளசி வாசத்தை கொடுக்கும்.இதன் அரிசியில் இருந்து கிடைக்கும் சத்துக்களால், உள் உறுப்புகள் பலப்படும்; சீரான செரிமான சக்தியை துாண்டும்; சுவாச தொடர்பான பிரச்னைக்கு பலன் கிடைக்கும். இது, பிற ரக சீரக சம்பா நெல்லைவிட, கூடுதல் மருத்துவ குணம் உடையது.ஏக்கருக்கு, 15 மூட்டைகள் நெல் மகசூல் பெறலாம். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும்போது, 1 கிலோ, 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 95432 83963* விவசாய மலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE