பால் சுரப்பு காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய கால்நடை உதவி பேராசிரியர் ரா.கோபி கூறியதாவது:கறவை மாடுகளுக்கு, பால் சுரப்பு காய்ச்சல் நோய் வரும். அதிக பால் கொடுக்கும் மாடுகள் மற்றும் மூன்று கன்றுகளை போட்ட மாடுகளை, இந்நோய் தாக்கும்.கன்று போட்ட மாடு, சீம்பாலை கொடுப்பதற்கு, அதிக கால்சியம் தேவைப்படும். இதுபோன்ற நேரங்களில், கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு, மாடுகளுக்கு பால் சுரப்பு காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும்.
இந்நோய் தாக்கினால், சினையாக இருக்கும் மாடு, தீவனம் உட்கொள்ளாமல், எழ முடியாமல் சோர்வாக இருக்கும். உட்கார்ந்த நிலையில், கழுத்தை, வயிறு பக்கமாக திருப்பி வைத்துக்கொள்ளும். சாணம் போட முடியமல், வயிறு உப்பசம் ஏற்பட்டு, மாடு இறக்கவும் நேரிடும்.இதை தவிர்க்க, கறவை மாடுகளுக்கு பால் சுரப்பு காய்ச்சல் நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக, கால்நடை மருத்துவரை அணுகி, முறையாக சிகிச்சை அளிப்பதன் மூலமாக, கறவை மாடு இறப்பு தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு:75300 52315
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE