சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அமைச்சர் துறையை ஆட்டுவிக்கும் அம்மணி!

Added : டிச 08, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
அமைச்சர் துறையை ஆட்டுவிக்கும் அம்மணி!''தி.மு.க., தரப்புக்கும் வேண்டியவர்னு சொல்றா ஓய்...'' என வந்ததும், வராததுமாக, விஷயத்தை ஆரம்பித்தார், குப்பண்ணா.''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ரஜினி துவங்கப் போற கட்சிக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளரா நியமிக்கப்பட்டு உள்ள அர்ஜுன மூர்த்தி, தமிழக பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு தலைவரா இருந்தவர்... இவர், பா.ஜ.,வுல இருந்து

டீ கடை பெஞ்ச்

அமைச்சர் துறையை ஆட்டுவிக்கும் அம்மணி!

''தி.மு.க., தரப்புக்கும் வேண்டியவர்னு சொல்றா ஓய்...'' என வந்ததும், வராததுமாக, விஷயத்தை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ரஜினி துவங்கப் போற கட்சிக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளரா நியமிக்கப்பட்டு உள்ள அர்ஜுன மூர்த்தி, தமிழக பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு தலைவரா இருந்தவர்... இவர், பா.ஜ.,வுல இருந்து
விலகறதா அறிக்கை குடுத்தாரோல்லியோ...
''அவர், ரஜினி கட்சிக்கு போகாம இருந்தாலும், அவரை நீக்கிடறதா தான், பா.ஜ., தரப்புல, 'பிளான்' பண்ணியிருக்கா... ஏன்னா அவர், ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு உறவினராம் ஓய்...
''இதனால, தி.மு.க.,வுக்கு நெருக்கமா இருக்கார்னு, பா.ஜ., மேலிடத்துக்கும் புகார்கள் போயிடுத்து... அதுவும் இல்லாம, ஒரே முகவரியில, ஏழு போலி நிறுவனங்களை நடத்தி, வரி ஏய்ப்பு செய்ததாகவும் அவரைப் பற்றி புகார்கள் போனது...
''இதனால, அவரை நீக்கிடலாம்னு இருந்த சூழல்ல, அவராவே போயிட்டார்னு, பா.ஜ.,வினர் சொல்றா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''டாஸ்மாக் மேற்பார்வையாளர் நியமனத்துல முறைகேடு நடந்திருக்குது பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''டிகிரி முடிச்சவங்களை, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராகவும், 10ம் வகுப்பு முடிச்சவங்களை, உதவியாளராகவும் நியமிப்பாங்க...
''ஆனா, சேலம் மாவட்டத்துல, 10ம் வகுப்பு முடிச்சு, திறந்தவெளி பல்கலையில, டிகிரி முடிச்ச, 18 பேர் மேற்பார்வையாளரா நியமிக்கப்பட்டிருக்காங்க பா...
''இதுல, சில தொழிற்சங்க நிர்வாகிகளும் உண்டு... விதிப்படி, திறந்தநிலை பல்கலையில, டிகிரி முடிச்சவங்களை, மேற்பார்வையாளரா நியமிக்க கூடாது...
''அதனால, இந்த 18 பேரை பணியிறக்கம் செய்யணும்னு, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார்கள் போயிருக்குது பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''அமைச்சர் மேல, மூத்த அமைச்சர்கள் சிலர், முதல்வரிடம் பிராது குடுத்திருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக அமைச்சர் ஒருத்தர், அவரது துறையில, உதவிப் பேராசிரியை பணியில இருந்த ஒருவரை, தொழில்நுட்ப உதவியாளரா நியமிச்சிருக்காரு... துறையில, இந்தம்மா வச்சது தான் சட்டம்னு ஆயிட்டு வே... பண விவகாரத்தை எல்லாம் அவங்க தான் பார்க்கிறாங்க...
''அமைச்சர் துறையில, சென்னை பல்லாவரம், போரூர் பகுதியில, சில பணியிடங்கள் காலியா இருந்துச்சு... இதுக்கு, மூத்த அமைச்சர்கள் சிலர், சிலரது பெயர்களை பரிந்துரை பண்ணியிருக்காவ வே...''அதை கண்டுக்காத அமைச்சர், பெண் உதவியாளர் சிபாரிசுல வந்தவங்களுக்கு, பணி
மாறுதல் குடுத்துட்டாரு... எந்த காரியத்துக்கும், மற்ற அமைச்சர்களின் பரிந்துரை கடிதத்தோட போனா, 'அங்க எல்லாம் ஏன் போறீங்க'ன்னு பெண் உதவியாளர் மிரட்டுதாங்களாம்...
''இதனால, கடுப்பான சீனியர் அமைச்சர்கள், முதல்வரிடம் புகார் பண்ணியிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
அரட்டை முடிந்து அனைவரும் தெருவில் நடக்க, ஸ்கூட்டியில் சென்ற ஒரு பெண், வண்டியை நிறுத்தி, குப்பண்ணாவிடம், ''தாத்தா, வண்டியில வரேளா... ஆத்துல விட்டுடறேன்...'' எனக் கேட்க, ''வேண்டாம் ஞானலட்சுமி, நான் இப்படி, 'கால்நடை'யாவே போயிடறேன்...'' என்ற
படி, நண்பர்களுடன் நடக்கத் துவங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
09-டிச-202009:12:18 IST Report Abuse
Arul Narayanan How Rajni appointed Arjun Murthy without any enquiry? Moreover his latest son in law belongs to a DMK family.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
09-டிச-202008:57:50 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இது தெரியாமலா ரஜினி இவரை மேற்பார்வையாளராக நியமித்துள்ளார்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-டிச-202006:17:34 IST Report Abuse
D.Ambujavalli ‘கால் நடை’ அந்தப் பெண் உதவியாளருக்கு இவ்வளவு ‘இடம்’ கொடுக்கிறார் என்றால் புதுப் புதுக் கதைகள் ஏதாவது இருக்கலாம் அவரது ரகசியம் எது இந்தம்மா கையில் இருக்கிறதோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X