சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஐந்து ரூபாய் பாடகர்கள்!

Added : டிச 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஐந்து ரூபாய் பாடகர்கள்!இருவரும் இணைந்து, கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தி வருவது பற்றி, 'மேட்டூர் சகோதரர்கள்' சஞ்சீவி, முரளி: எங்கள் இருவருக்கும், சேலம் மாவட்டம், மேட்டூர் தான் சொந்த ஊர். இருவரும், 'கெம்பிளாஸ்ட்' நிறுவனத்தில் பணிபுரிந்த போது, நட்புடன் பழகினோம். இப்போது, விருப்ப ஓய்வுபெற்று, முழு நேரமும் இணைந்து, பாடல்களை பாடி வருகிறோம்.அய்யப்பன் பஜனை

சொல்கிறார்கள்


ஐந்து ரூபாய் பாடகர்கள்!இருவரும் இணைந்து, கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தி வருவது பற்றி, 'மேட்டூர் சகோதரர்கள்' சஞ்சீவி, முரளி: எங்கள் இருவருக்கும், சேலம் மாவட்டம், மேட்டூர் தான் சொந்த ஊர். இருவரும், 'கெம்பிளாஸ்ட்' நிறுவனத்தில் பணிபுரிந்த போது, நட்புடன் பழகினோம். இப்போது, விருப்ப ஓய்வுபெற்று, முழு நேரமும் இணைந்து, பாடல்களை பாடி வருகிறோம்.அய்யப்பன் பஜனை பாடல்களை, முரளி நன்றாக பாடுவார். சபரிமலைக்கு நாங்கள் இருவரும் சென்றிருந்த போது, கோரசாக பாடத் துவங்கினோம். எங்கள் இருவரின் குரலின் அலைவரிசையும் ஒன்றாக இருந்ததை கேட்ட பலரும் பாராட்டினர். அதன்பின் நாங்கள் இருவரும் எங்கு சென்றாலும், 'இருவரும் சேர்ந்து பாடுங்களேன்' என, பலரும் அன்புடன் கேட்பர்; நாங்களும் பாடுவோம்.எங்களின் நட்பு, 1995 முதல் தொடர்கிறது. நாங்கள் இருவரும், அண்ணன் - தம்பி என்று தான் பலரும் நினைப்பர். அந்த அளவுக்கு இருவரும் ஒன்றாக ஆடை அலங்காரம் செய்து கொண்டு, ஒரே குரலில் பாடல்களை பாடுவோம்.
மேட்டூர், ஈரோடு சுற்றுவட்டாரங்களில் பல ஊர்களில், கோவில்களில் பக்தி பாடல்களையும், கர்நாடக இசை பாடல்களையும் நாங்கள் பாடுவதால், இந்த பகுதியில் எங்களை அறியாதவர்களே கிடையாது. எங்கள் கச்சேரியை கேட்ட, செம்மங்குடி சீனிவாசன் அய்யாவின் சிஷ்யையான முத்துலட்சுமி, எங்களுக்கு குருவாக இருந்து, கர்நாடக இசையை கற்றுக் கொடுத்தார்.

அதற்கு முன், கர்நாடக இசையை நாங்கள் முறைப்படி கற்கவே இல்லை. அதனால், எங்கள் இசைப் பள்ளிக்கு, முத்துலட்சுமி மியூசிக் ஸ்கூல் என, பெயர் வைத்து உள்ளோம்.நாங்கள் இருவரும் இணைந்து, இதுவரை,2,500 கச்சேரிகள் நடத்தியுள்ளோம். தமிழகத்தின் முக்கிய கோவில்கள் குறித்து பாடி, 'சிடி' வெளியிட்டுள்ளோம். மேலும், நாடு முழுதும் பயணித்து, அலகாபாத் கும்பமேளா, அயோத்தி, ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் போன்ற நகரங்களிலும் கச்சேரிகள் நடத்திஉள்ளோம். கர்நாடக சங்கீதத்தை அனைவரும் விரும்பும் வண்ணம், மக்கள் மத்தியில் இன்னும் பிரபலப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். கர்நாடக சங்கீதம் முதலில் கேட்பதற்கு கரடு, முரடாக இருக்கும். கேட்டு பழகி விட்டால், அமுதமாக இனிக்கும். கர்நாடக இசையை கற்க கற்க, மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் வலுப்பெற்று, வாழ்வே வளமாகும்.எங்களைப் போலவே, எங்கள் மனைவியரும் ஒற்றுமையாக, கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ஆதரவால், எங்கள் இசைப் பணி தொடர்கிறது.கர்நாடக இசையை எல்லாருக்கும் கற்றுக் கொடுக்கவும் செய்கிறோம். அதற்காக மிகக் குறைந்த கட்டணம் வசூலிப்பதால், 'ஐந்து ரூபாய் பாடகர்கள்' என்றும், எங்களை செல்லமாக அழைக்கின்றனர்!

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMAR. S - GUJARAT ,இந்தியா
09-டிச-202011:10:42 IST Report Abuse
KUMAR. S உங்கள் நற்பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
samkey - tanjore,இந்தியா
09-டிச-202009:18:33 IST Report Abuse
samkey வாழ்த்துக்கள். கர்நாடக இசை உலகிலும் வாரிசுகள் எளிதாக வலம் இக்காலத்தில் ஏகலைவர்களாக உருவாகி இருக்கிறீர்கள். அந்த அய்யனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்
Rate this:
Cancel
Sowrirajan Pathravi - chennai,இந்தியா
09-டிச-202008:17:03 IST Report Abuse
Sowrirajan Pathravi great job. let it continue regards sowrirajan advocate
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X