இந்தியா

சொத்து வரி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

Added : டிச 08, 2020
Share
Advertisement
புதுச்சேரி : சொத்து வரி செலுத்தாதவர்கள் மற்றும் வணிக உரிமம் புதுப்பிக்காதவர்களின் பட்டியல் புதுச்சேரி நகராட்சி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி நகராட்சியில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மற்றும் வணிக உரிமம் புதுப்பிக்காதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரி நகராட்சியின்

புதுச்சேரி : சொத்து வரி செலுத்தாதவர்கள் மற்றும் வணிக உரிமம் புதுப்பிக்காதவர்களின் பட்டியல் புதுச்சேரி நகராட்சி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி நகராட்சியில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மற்றும் வணிக உரிமம் புதுப்பிக்காதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரி நகராட்சியின் இணைய தளமான www.pdymun.inல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிடலாம். சொத்து வரி செலுத்துவது சட்டரிதியான கடமை. அதை உரிய நேரத்தில் செலுத்தாவிடில் அபராதம், வட்டி ஆகியவை விதிக்கப்படுவதோடு, அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கையும் எடுக்க நேரிடும்.

இதேபோல், வணிக நிறுவனங்கள் நடத்துவோர் அனைவரும் புதுச்சேரி நகராட்சியிடம் வணிக உரிமம் பெறுவதோடு, அதை உரிய கால இடைவெளியில் புதுப்பித்து வருதல் வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுவதோடு, நிறுவனங்களை சீல் வைக்கவும் நேரிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X