திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், 6.42 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வளாக கட்டடம் திறக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊரக மற்றும் நகர்பற வாழ்வாதார இயக்கம், ஊராட்சி உதவி இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் தணிக்கை பிரிவு ஆகியவை இயங்கி வந்தன.குறுகிய மற்றும் அலுவலகத்தின் வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்ததால், ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகம் செய்வதில், இடையூறு ஏற்பட்டது.
இதையடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளாக கட்டடம், 6.42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது.இதை, முதல்வர் இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, கலெக்டர் பொன்னையா கூறியதாவது:தரை தளம் மற்றும் முதல் தளங்களுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊராட்சிகள் உதவி இயக்குனர், தணிக்கை உதவி இயக்குனர் ஆகிய அலுவலகம் செயல்படும்.
இக்கட்டடத்தில், லிப்ட், ஜெனரேட்டர், யூ.பி.எஸ்., தீயணைப்பு கருவி மற்றும் 150 பேர் அமரக்கூடிய கூட்டரங்கம் ஆகிய வசதிகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE