சென்னை : சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்கான தொலை நோக்கு அறிக்கை தயாரிக்க, கலந்தாலோசகர் தேர்வு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. இதன் செயலாக்க காலம், 2026 வரை என, வரையறுக்கப்பட்டது.நகரமைப்பு விதிகளின்படி, உரிய கால இடைவெளியில், முறையாக மறு ஆய்வு செய்யப்படாததால், இரண்டாவது முழுமை திட்ட பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், உலக வங்கி அழுத்தம் காரணமாக, மூன்றாவது முழுமை திட்ட தயாரிப்பு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.மூன்றாவது முழுமை திட்டம், 2026 முதல், 2046 வரை அமலில் இருக்கும். இதற்கு ஏற்ப, தொலைநோக்கு ஆவணத்தை தயாரிக்க வேண்டும்.இப்பணிக்காக, கலந்தாலோசகர்களை நியமிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE