பொது செய்தி

தமிழ்நாடு

கிண்டி நேதாஜி நகருக்கு கிடைத்தது விடிவு

Added : டிச 08, 2020
Share
Advertisement
கிண்டி : மழை நீர் தேங்குவதை தடுக்க, கிண்டி, மடுவாங்கரையில் இருந்து, வேளச்சேரி ஏரி வரை, 1 கி.மீ., துாரம் வடிகால் கட்டும் நடவடிக்கைக்கு, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று கள ஆய்வு செய்தனர்.பரங்கிமலை, கத்திப்பாராவில் இருந்து, அரை கி.மீ., தொலைவில் உள்ளது, அடையாறு ஆறு.நீரோட்ட பாதைஆனால், கனமழையின்போது, இப்பகுதி மழைநீர், நீரோட்ட பாதையில், ஆலந்துார், மடுவாங்கரை, நேதாஜி நகர் சாலை வழியாக,

கிண்டி : மழை நீர் தேங்குவதை தடுக்க, கிண்டி, மடுவாங்கரையில் இருந்து, வேளச்சேரி ஏரி வரை, 1 கி.மீ., துாரம் வடிகால் கட்டும் நடவடிக்கைக்கு, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று கள ஆய்வு செய்தனர்.

பரங்கிமலை, கத்திப்பாராவில் இருந்து, அரை கி.மீ., தொலைவில் உள்ளது, அடையாறு ஆறு.நீரோட்ட பாதைஆனால், கனமழையின்போது, இப்பகுதி மழைநீர், நீரோட்ட பாதையில், ஆலந்துார், மடுவாங்கரை, நேதாஜி நகர் சாலை வழியாக, வேளச்சேரி ஏரியில் கலந்து, சதுப்பு நிலத்தை அடைகிறது.

மடுவாங்கரையில் இருந்து வேளச்சேரி ஏரி வரை உள்ள நீரோட்ட பாதையை முறையாக பராமரிக்காததால், நேதாஜி நகர் சாலையில், 3 அடி உயரத்தில் மழைநீர் தேங்கியது.கடந்த, 2015ம் ஆண்டு மழையில், இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டபோது, நேதாஜி நகர் பகுதியை, உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.அப்போது, 'மடுவாங்கரையில் இருந்து, வேளச்சேரி ஏரிக்கு செல்லும், நேதாஜி நகர் சாலையில் உள்ள, 2 அடி அகல வடிகால் போதுமானதாக இல்லை; சாலையின் இரு பகுதியிலும், 4 அடி அகலம் வீதம் வடிகால் அல்லது சாலை மையப் பகுதியில், 10 அடி அகல மூடி கால்வாய் அமைக்க வேண்டும்' என அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

பிரச்னை

'மடுவாங்கரையில் இருந்து, ஏரி வரை உள்ள பகுதி, 174 மற்றும், 177வது வார்டில் வருவதால், மதிப்பீடு தயாரிப்பது யார்?' என, இரு வார்டு பொறியாளர்கள் இடையே, பிரச்னை எழுந்தது. இதன் காரணமாக, திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று, மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை மற்றும் அடையாறு மண்டல அதிகாரிகள், கிண்டி, மடுவாங்கரை, நேதாஜி நகர் சாலை மற்றும் வேளச்சேரி ஏரி பகுதிகளை ஆய்வு செய்தனர்.மடுவாங்கரையில் இருந்து ஏரி வரை, 1 கி.மீ., துாரம் வரை, நீரோட்டத்தை கணக்கிட்டு, பெரிய வடிகால் கட்ட திட்டமிட்டனர்.இதற்கான, மதிப்பீடு தயாரிப்பு விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X