மதுரவாயல் : மதுரவாயலில், கடத்தல் நாடகமாடிய பெண்ணை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மதுரவாயலைச் சேர்ந்தவர், 21 வயது பெண். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, தன்னை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாகவும், தான் கத்தியதால், தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றதாகவும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் தெரிவித்தார்.
இது குறித்து, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற, மதுரவாயல் போலீசார், அந்த பெண்ணை மீட்டு, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். நேற்று காலை, அந்த பெண்ணிடம், கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.மேலும், அவரது மொபைல் போனை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு, 1:00 மணி வரை, அவரது ஆண் நண்பருடன் 'சாட்' செய்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், ஆண் நண்பருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாகவும், இந்த விஷயம் வீட்டில் தெரிந்தால், பெற்றோர் திட்டுவர் என பயந்து, தன்னை சிலர் கடத்திச் சென்றதாக கூறியதாக தெரிய வந்தது.இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், அப்பெண்ணின் ஆண் நண்பரிடம், விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE