சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் காவலர் பரிதாப பலி

Added : டிச 08, 2020
Share
Advertisement
ஆவடி : ஆவடி அருகே நடந்த விபத்தில், பஸ் - ஆட்டோ இடையே சிக்கி, காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுதன், 41; ஆயுதப்படை காவலர். இவர், நேற்று காலை, ஆவடி- நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில், பரங்கிமலைக்கு சென்று கொண்டிருந்தார்.கோவர்த்தனகிரி அருகே சென்றபோது, திடீரென நாய் ஒன்றே குறுக்கே ஓடியது.இதனால், அவருக்கு முன்னால் சென்ற, தனியார் பஸ்

ஆவடி : ஆவடி அருகே நடந்த விபத்தில், பஸ் - ஆட்டோ இடையே சிக்கி, காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுதன், 41; ஆயுதப்படை காவலர். இவர், நேற்று காலை, ஆவடி- நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில், பரங்கிமலைக்கு சென்று கொண்டிருந்தார்.கோவர்த்தனகிரி அருகே சென்றபோது, திடீரென நாய் ஒன்றே குறுக்கே ஓடியது.இதனால், அவருக்கு முன்னால் சென்ற, தனியார் பஸ் ஓட்டுனர், திடீரென 'பிரேக்' போட்டுள்ளார். சுதனும் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

ஆனால், பின்னால் வந்த ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், பஸ் -- ஆட்டோ இடையே, சுதன் சிக்கினார்.இதில், சுதன் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே, அவர் உயிரிழந்தார்.இது குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆட்டோ ஓட்டுனரான முகமது காந்தி, 20, பஸ் ஓட்டுனர் செந்தில்குமார், 42, ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X