அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராட்டம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சென்னை:விவசாயிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில், சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடு தழுவிய, 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டது. அதற்கு ஆதரவாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,

சென்னை:விவசாயிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில், சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடு தழுவிய, 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டது. அதற்கு ஆதரவாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட, 10 கட்சிகளின் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


பேரணி

மன்னார்குடி, திருவாரூர், கடலுார், விழுப்புரம் உட்பட, மாநிலம் முழுதும், தி.மு.க., கூட்டணி கட்சியினர், பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்கங்களின் சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்ட செயலர் மா.சுப்பிரமணியன் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவொற்றியூர் தபால் நிலையம் அருகில், பகுதி செயலர் தனியரசு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலர் சுதர்சனம், டாக்டர் கலாநிதி எம்.பி., சமத்துவ மக்கள் கழக தலைவர் நாரயணன் உட்பட, 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தபால் நிலையம் அருகே கூடி, கோஷங்கள் எழுப்பினர். ஒரு மணி நேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பின், அவர்களை கைது செய்ய, ஏழு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.


700க்கும் மேற்பட்டோர்

ஆனால், 700க்கும் மேற்பட்டோரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின், அமைதியாக கலைந்து செல்லும்படி, போலீசார் கூறினர்.சென்னை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்ட செயலர்கள் சேகர்பாபு எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., மாவட்ட செயலர் இளைய அருணா, வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை, வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X