சென்னை : 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க வசதியில்லாத, 110 மாணவ - மாணவியருக்கு, போலீஸ் கமிஷனர், 'டேப்லெட்' மற்றும் 'ஸ்மார்ட் போன்'களை வழங்கினார்.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுஉள்ளன. இதனால், மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கப்படுகிறது. வசதியில்லாத மாணவர்கள், ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. இவர்களுக்கு உதவி செய்வதற்காக, சென்னை போலீஸ் கமிஷனர், மகேஷ்குமார் அகர்வாலின் மகள்கள், அர்ஷிதா அகர்வால் மற்றும் குனிஷா அகர்வால் ஆகியோர், Helpchennai.org என்ற அமைப்பை துவக்கி உள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில், தனியார் மற்றும் சேவை நிறுவனங்களில் இருந்து, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, நல்ல நிலையில் இருக்கும், ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்கள் சேகரிக்கப்பட்டன. பயனாளர்கள், இந்த அமைப்பின் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் வரப்பெற்று, தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில், 300 பேருக்கு, ஏற்கனவே, ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்கள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக, புதிதாக, 4 லட்சம் ரூபாய்க்கு, டேப்லெட்கள் வாங்கப்பட்டு, 50 மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டன.உடன், ஹெச்.சி.எல்., நிறுவனம், 6 லட்சம் ரூபாய்க்கு, ஸ்மார்ட் போன்களை கொள்முதல் செய்து, Helpchennai.org என்ற அமைப்பின் வாயிலாக, 60 மாணவ - மாணவியருக்கு வழங்கிஉள்ளது.
இதற்கான நிகழ்ச்சி, சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 110 மாணவ - மாணவியருக்கு, கமிஷனர் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE