சென்னை : நீண்ட இடைவெளிக்கு பின், கல்லுாரிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் செயல்படும் அரசின் கல்வி விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக, மார்ச்சில், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால், கல்லுாரிகள், பல்கலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன.இதன்படி, தொழில்நுட்பம், முதுகலை படிப்பில், இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள், நேற்று முன்தினம் முதல் கல்லுாரிகளில் துவங்கின.தொடர்ந்து, மாவட்டத்தில் செயல்படும், அரசின் கல்வி விடுதிகளும், நீண்ட இடைவெளிக்கு பின் திறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'அரசின் அறிவுறுத்தல்படி, சென்னை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், 14 விடுதிகளும், ஆதிதிராவிடர் நலத்துறையில், ஆறு விடுதிகளும் திறக்கப்பட்டன. 'விடுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும்படி, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE