சென்னை : ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில், உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் காலிப் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், 18 -- 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அதேபோல், ஓட்டுனர் பணியிடத்திற்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், இலகுரக ஓட்டுனர் உரிமத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுடையோர், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை அணுகி, இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE