அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி கட்சியில் சேர தி.மு.க., - காங்., அதிருப்தியாளர்கள் ஆர்வம்

Added : டிச 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:நடிகர் ரஜினி துவக்கஉள்ள கட்சி பெயரை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. இதற்கிடையில், அவரது கட்சியில் சேர, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஜனவரி மாதம் கட்சி துவங்க, ரஜினி திட்டமிட்டுள்ளார். அது தொடர்பான அறிவிப்பை, வரும், 31ம் தேதி வெளியிட உள்ளார். வரும், 12ம் தேதி, ரஜினிக்கு பிறந்த நாள். அதை,

சென்னை:நடிகர் ரஜினி துவக்கஉள்ள கட்சி பெயரை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. இதற்கிடையில், அவரது கட்சியில் சேர, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஜனவரி மாதம் கட்சி துவங்க, ரஜினி திட்டமிட்டுள்ளார். அது தொடர்பான அறிவிப்பை, வரும், 31ம் தேதி வெளியிட உள்ளார். வரும், 12ம் தேதி, ரஜினிக்கு பிறந்த நாள். அதை, பெங்களூரில் உள்ள தன் அண்ணன் சத்தியநாராயணன் வீட்டில் கொண்டாடுகிறார். பின், அண்ணாத்தே படப்படிப்பில் பங்கேற்க, ஐதராபாத் செல்கிறார்.


நலத்திட்ட உதவிகள்

ரஜினி பிறந்த நாளை ஒட்டி, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் உள்ள அலுவலகம், தற்காலிக கட்சி அலுவகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு, ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் வழக்கறிஞர்கள் குழுவினர், கட்சி பெயரை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான பணிகள் குறித்து, ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில், அதிருப்தியில் இருப்பவர்கள், ரஜினி கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் பின்னணி பற்றி, ரஜினி சார்பில், ஒரு சிறப்பு குழு அலசி ஆராய்ந்து வருகிறது. அக்குழு தேர்வு செய்தவர்களை மட்டும், ரஜினி தரப்பில் தொடர்பு கொள்கின்றனர்.


அழைப்பு வரும்

'கட்சி துவக்கியதும், உங்களுக்கு அழைப்பு வரும்; அப்போது, இணைந்து விடுங்கள்' என, ரஜினி தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. ரஜினி கட்சியில் சேர விரும்புவோரில், தி.மு.க., பிரமுகர்கள் தான் அதிகம் என்ற தகவல், ரஜினி மன்ற வட்டாரத்தில் வெளியாகி உள்ளது. தி.மு.க.,வில், குறுநில மன்னர்களாக செயல்படுகிற, முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்களின் போக்கு பிடிக்காத பலர், ரஜினி கட்சியில் சேர தயாராகி வருகின்றனர் என, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-டிச-202010:09:35 IST Report Abuse
Bhaskaran தன நிலல் கூட பின்னாடிபோகாத அரசியல்வாதிகள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கின்றனர் அவர்களுக்கு ரஜனி கட்சியில் முதலிடம் உண்டு இவிங்க சொன்னால் இவர்கள் மனைவி கூட ஓட்டுபோடமாட்டார்கள்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
09-டிச-202003:25:37 IST Report Abuse
Baskar ரஜினி சுத்தமான கை லஞ்சம் வாங்க மாட்டார் அப்படி யாராவது லஞ்ச ஊழல் வழக்கில் உள்ளவர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்றார். இப்போ என்னவென்றால் காங்கிரஸ்காரன் ஊழல் வாதி. தி.மு.க காரன் ஊழல் பெருச்சாளி. இவர்களை சேர்த்தால் அவரது கட்சி ஊழல் இல்லா கட்சியாக மாறி விடுமா. இப்பவே தமிழருவி மணியன் ஒரு வேலையை முடித்து கொடுக்க எவ்வளவோ ரெட் பேசி விட்டான். இந்த ரஜினியை ஆட்டி வைக்க போவது புதிதாக கட்சியில் சேரும் காங்கிரஸ்காரனும் தி.மு.க காரனும் தான். இதற்க்கு தலைவன் தமிழருவி மணியன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X