பொது செய்தி

தமிழ்நாடு

6.66 லட்சம் ஏக்கர் பயிர் 'புரெவி' புயலால் சேதம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், 'புரெவி' புயலை தொடர்ந்து பெய்த கன மழையால், 6.66 லட்சம் ஏக்கரில் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.பல்வேறு மாவட்டங்களில், 30 லட்சம் ஏக்கருக்கு மேல், சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானிய பயிர்கள் சாகுபடியிலும், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், 'நிவர்' புயல் காரணமாக, பல்வேறு

சென்னை:தமிழகத்தில், 'புரெவி' புயலை தொடர்ந்து பெய்த கன மழையால், 6.66 லட்சம் ஏக்கரில் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.

பல்வேறு மாவட்டங்களில், 30 லட்சம் ஏக்கருக்கு மேல், சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானிய பயிர்கள் சாகுபடியிலும், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், 'நிவர்' புயல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த, 32 ஆயிரத்து, 110 ஏக்கர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்தன.

இதை தொடர்ந்து உருவான, 'புரெவி' புயல் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கன மழை கொட்டி தீர்த்தது.அதில், 6.66 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அதிகபட்சமாக, 6.17 லட்சம் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது, வேளாண் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவை, 49 ஆயிரத்து, 400 ஏக்கர் பரப்பளவில் சேதம் அடைந்துள்ளன. திருவாரூரில், 2.14 லட்சம் ஏக்கர்; நாகையில், 1.97 லட்சம் ஏக்கர்; கடலுாரில், 1.35 லட்சம் ஏக்கர்; தஞ்சாவூரில், 29 ஆயிரத்து, 640 ஏக்கர்; திருவள்ளூரில், 22 ஆயிரத்து, 230 ஏக்கர் பயிர்கள் சேதமாகியுள்ளன.

பயிர் பாதித்த விவசாயிகளுக்கு, அரசிடம் இருந்து நிவாரண உதவிகளை பெற்று தருவதற்கான பணிகளில், வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், கவனம் செலுத்தி வருகின்றனர். பயிர் பாதிப்பு தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விரைவில், விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, இழப்பீடு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X