சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பந்த்' - தமிழகத்தில் பாதிப்பில்லை!

Added : டிச 09, 2020
Share
Advertisement
சென்னை:நாடு முழுதும் நடந்த, 'பந்த்' போராட்டத்தால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில், கடைகள் திறந்திருந்தன. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. சாலை மறியலில் ஈடுபட்ட, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.மத்திய அரசு, புதிதாக கொண்டு வந்த, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப் மாநில விவசாயிகள், டில்லியை முற்றுகையிட்டு,

சென்னை:நாடு முழுதும் நடந்த, 'பந்த்' போராட்டத்தால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில், கடைகள் திறந்திருந்தன. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. சாலை மறியலில் ஈடுபட்ட, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு, புதிதாக கொண்டு வந்த, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப் மாநில விவசாயிகள், டில்லியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன், மத்திய அரசு சார்பில், ஐந்து முறை பேச்சு நடத்தப்பட்டது. ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளதால், தீர்வு ஏற்படவில்லை.

விவசாய அமைப்புகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, அரசு தரப்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பொது வேலை நிறுத்தத்திற்கு, தமிழக மக்களிடம் ஆதரவு இல்லை. பெரும்பாலான மாவட்டங்களில், பஸ்கள், ரயில்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின. கடைகள் திறந்திருந்தன; அரசு அலுவலகங்கள், வங்கிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. சென்னையில், வழக்கம் போல, அனைத்து வாகனங்களும் இயங்கியதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தலைமை செயலகம் உட்பட, அனைத்து அரசு அலுவலகங்களிலும், பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்திருந்தனர். தனியார் அலுவலகங்களும், கடைகளும், வணிக நிறுவனங்களும், ஓட்டல்களும் செயல்பட்டன.விவசாயிகள் போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடந்தது.போராட்டத்தில் ஈடுபட்ட, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X