செய்தி சில வரிகளில்...மாவட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...மாவட்டம்

Added : டிச 09, 2020
Share
அக்கா, தம்பிக்கு 10 ஆண்டு சிறைகோவை: ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் அடுத்த தண்ணீர் பந்தல் பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார், 35. இவரது மூத்த சகோதரி கிருஷ்ணவேணி, 37. இவர்கள், நசியனுாரில், 'நந்து சிஸ்டம் அண்டு சாப்ட்வேர்' என்ற பெயரில், 2012ல் நிதி நிறுவனம் நடத்தினர்.'ஒரு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தால், மாதம், 13 ஆயிரம் ரூபாய் வட்டி, மூன்றாண்டு நிறைவடைந்த பின், டிபாசிட் தொகை

அக்கா, தம்பிக்கு 10 ஆண்டு சிறை

கோவை: ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் அடுத்த தண்ணீர் பந்தல் பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார், 35. இவரது மூத்த சகோதரி கிருஷ்ணவேணி, 37. இவர்கள், நசியனுாரில், 'நந்து சிஸ்டம் அண்டு சாப்ட்வேர்' என்ற பெயரில், 2012ல் நிதி நிறுவனம் நடத்தினர்.'ஒரு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தால், மாதம், 13 ஆயிரம் ரூபாய் வட்டி, மூன்றாண்டு நிறைவடைந்த பின், டிபாசிட் தொகை திருப்பி தரப்படும்' என விளம்பரப்படுத்தி, 39 பேரிடம், 82.27 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர்.நந்தகுமார், கிருஷ்ணவேணியை, 2012 மே 30ல் போலீசார் கைது செய்து, கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிபதி ரவி, இருவருக்கும், தலா, 10 ஆண்டு சிறை, 46.80 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X