சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழை நீரை வெளியேற்ற களம் இறங்கிய இளைஞர்

Added : டிச 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தஞ்சாவூர்:வாய்க்காலில் புதர்கள்மண்டியிருந்ததால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இளைஞர் ஒருவர் சொந்த செலவில், வாய்க்காலை சுத்தம் செய்து, மழை நீரை வெளியேற்றினார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமேஷ், 28. டிப்ளமாபடித்து, 'வெல்டிங்' வேலை செய்து வருகிறார்.இவரது கிராமத்தில் உள்ள நடுத்தோப்பு பகுதியில், வடிகால்
 மழை நீரை வெளியேற்ற  களம் இறங்கிய இளைஞர்

தஞ்சாவூர்:வாய்க்காலில் புதர்கள்மண்டியிருந்ததால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இளைஞர் ஒருவர் சொந்த செலவில், வாய்க்காலை சுத்தம் செய்து, மழை நீரை வெளியேற்றினார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமேஷ், 28. டிப்ளமாபடித்து, 'வெல்டிங்' வேலை செய்து வருகிறார்.இவரது கிராமத்தில் உள்ள நடுத்தோப்பு பகுதியில், வடிகால் வாய்க்கால்களில் புதர்கள் மண்டியதால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதியடைந்தனர்.இதை, பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாததால், காமேஷ் சொந்த செலவில், வாய்க்காலில் மண்டியிருந்த புதர்களை அகற்றினார்.

தற்போது, குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர் முழுமையாக வடிந்ததால், பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.காமேஷ் கூறியதாவது:இப்பகுதியில், 300 குடும்பங்கள் உள்ளன. தொடர் மழையால், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. தண்ணீர் வடியும் வாய்க்காலில், 2 கி.மீ.,க்கு புதர்கள் மண்டி இருந்ததால், தண்ணீர் வடியவில்லை.

உள்ளாட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் பயனில்லாததால், கடந்த, 4ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை, 20 பேருடன் இணைந்து வாய்க்காலை சுத்தம் செய்தோம்.இதனால், குடியிருப்புபகுதியில் தேங்கிய தண்ணீர் வடிந்து விட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்டவர்கள், நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-202013:10:03 IST Report Abuse
சம்பத் குமார் திரு காமேஷ்க்கு வாழ்த்துக்கள். முதலில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கும்பகோணம் தற்போதைய DMK mla உடன் தெரியப்படுத்தவும். மாவட்ட ஆட்சியர் மற்றும் கும்பகோணம் தாசில்தார் உடனும் தெரியப்படுத்தி அடுத்த மழைக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-டிச-202010:02:56 IST Report Abuse
Bhaskaran உள்ளாட்சி அதிகாரிகள் இந்த வேலையே முடித்ததாக நேற்று மாலையே பில் போட்டு சாப்பிட்டிருகபோறாங்க கொஞ்சம் செக் பண்ணுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X