தஞ்சாவூர்:வாய்க்காலில் புதர்கள்மண்டியிருந்ததால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இளைஞர் ஒருவர் சொந்த செலவில், வாய்க்காலை சுத்தம் செய்து, மழை நீரை வெளியேற்றினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமேஷ், 28. டிப்ளமாபடித்து, 'வெல்டிங்' வேலை செய்து வருகிறார்.இவரது கிராமத்தில் உள்ள நடுத்தோப்பு பகுதியில், வடிகால் வாய்க்கால்களில் புதர்கள் மண்டியதால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதியடைந்தனர்.இதை, பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாததால், காமேஷ் சொந்த செலவில், வாய்க்காலில் மண்டியிருந்த புதர்களை அகற்றினார்.
தற்போது, குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர் முழுமையாக வடிந்ததால், பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.காமேஷ் கூறியதாவது:இப்பகுதியில், 300 குடும்பங்கள் உள்ளன. தொடர் மழையால், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. தண்ணீர் வடியும் வாய்க்காலில், 2 கி.மீ.,க்கு புதர்கள் மண்டி இருந்ததால், தண்ணீர் வடியவில்லை.
உள்ளாட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் பயனில்லாததால், கடந்த, 4ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை, 20 பேருடன் இணைந்து வாய்க்காலை சுத்தம் செய்தோம்.இதனால், குடியிருப்புபகுதியில் தேங்கிய தண்ணீர் வடிந்து விட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்டவர்கள், நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE