கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்ட வழக்குகள் நிலை: உயர் நீதிமன்றம் கேள்வி

Added : டிச 09, 2020
Share
Advertisement
மதுரை:'கடந்த, 20 ஆண்டுகளில்,எத்தனை வழக்குகள், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டன, அவற்றின் தற்போதைய நிலை என்ன' என, மத்திய அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாதிக்கப்பட்டோர் சங்கம் செயலர் சஞ்சீவ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னையைச் சேர்ந்த, 'புல்லியன் பின்டெக் எல்.எல்.பி.,' நிதி நிறுவனம் ராமநாதபுரத்தில் செயல்பட்டது.

மதுரை:'கடந்த, 20 ஆண்டுகளில்,எத்தனை வழக்குகள், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டன, அவற்றின் தற்போதைய நிலை என்ன' என, மத்திய அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாதிக்கப்பட்டோர் சங்கம் செயலர் சஞ்சீவ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னையைச் சேர்ந்த, 'புல்லியன் பின்டெக் எல்.எல்.பி.,' நிதி நிறுவனம் ராமநாதபுரத்தில் செயல்பட்டது.


ரூ.300 கோடி முதலீடு

முதலீட்டிற்கு இரட்டிப்புத் தொகை தருவதாக, நிறுவன நிர்வாகிகள் உறுதியளித்தனர். 750 பேர், 300 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.தொகையை திரும்பத் தராததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார், மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது.மோசடி வழக்குப் பதிந்தனர். வழக்கு விசாரணை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. வழக்கில் தொடர்புடையோரை பாதுகாக்கும் நோக்கில், சில உயரதிகாரிகள் செயல்படுகின்றனர்.மோசடி இதை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பது சரியாக இருக்காது. சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, சஞ்சீவ்குமார் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: மக்களின் பேராசைதான் இதுபோன்ற மோசடிக்கு காரணம். இதுபோல் பல மோசடிகள் நடக்கின்றனஎன தெரிந்தும், ஏன் மக்கள் ஏமாறுகின்றனர்.வங்கிகள், தபால் நிலையங்களில் முதலீடு செய்யலாமே?

தமிழக அரசுத் தரப்பு: வழக்கில் தொடர்புடைய ஒன்பது பேரில், நான்கு பேர் கைது செய்யப் பட்டனர். 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சில சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. முறையாக விசாரணை நடக்கிறது.

சி.பி.ஐ., தரப்பு: தீவிரமான, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே, சி.பி.ஐ., விசாரிக்க இயலும். இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வாய்ப்பில்லை. சி.பி.ஐ.,யில் போதிய அலுவலர்கள் இல்லை.இவ்வாறு, விவாதம் நடந்தது.

நீதிபதிகள் உத்தரவு:சி.பி.ஐ., மிக உயர்ந்த நம்பகமான விசாரணை அமைப்பு. அதை நம்பித்தான் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணை மாற்றப்படுகிறது. அதற்கென ஒரு, 'இமேஜ்' உண்டு. அதில் போதிய அலுவலர்கள் இல்லாததால், மாநில காவல் துறை மற்றும் மத்தியப் படைகளில் இருந்து, மாற்றுப்பணி அடிப்படையில், அலுவலர்களை ஈடுபடுத்துகின்றனர்.வங்கி மோசடி, நிதி மோசடி மற்றும், 'ஒயிட்காலர்' குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இதுபோன்ற வழக்குகளை கையாள, 'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்' மற்றும் 'கம்பெனி செக்ரட்டரி' படிப்பு முடித்த நிபுணத்துவம் வாய்ந்த அலுவலர்கள், சி.பி.ஐ.,யில் இருக்க வேண்டும்.


நிலை என்ன?

குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், சி.பி.ஐ.,யில் இல்லாததால், அது விசாரிக்கும் பல வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகின்றனர். இதைக் கருதி, கீழ்க்கண்ட கேள்விகளை இந்நீதிமன்றம் எழுப்புகிறது.'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்' மற்றும் 'கம்பெனி செக்ரட்டரி' படித்தவர்களை, ஏன் சி.பி.ஐ.,யில் நியமனம் செய்யக் கூடாது, 20 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டன, அவற்றின் தற்போதைய நிலை என்ன?

எத்தனை வழக்குகளில், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது, எத்தனை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி உள்ளனர் என்பதற்கு, மத்திய உள்துறை செயலர், சி.பி.ஐ., பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.இவ்வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், விரைவில் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நிறுவனத்தின் சொத்துகளை பறிமுதல் செய்வர் என இந்நீதிமன்றம் நம்புகிறது. விசாரணை டிச., 14க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X