மதுரை:பா.ஜ., மாநில தலைவர் முருகன் மதுரையில் கூறியதாவது:வேளாண் திருத்த சட்டங்களை காங்., சரத்பவார், தி.மு.க.,வும் ஆதரித்தனர். ஆனால், இன்றைக்கு அவர்கள் போலி வேஷம் போட்டு, விவசாயிகளை திசை திருப்புகின்றனர்.
தி.மு.க., அதன், 2016 சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'விவசாயிகள் இடைத்தரகர் இன்றி சந்தை விலைக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க சட்டம் கொண்டு வருவோம்' எனக் குறிப்பிட்டுள்ளது.ஆனால், பா.ஜ.,வுக்கு நல்ல பெயர் கிடைக்கும் எனக் கருதி, காங்., - தி.மு.க., இந்த விஷயத்தில், இரட்டை வேடம் போடுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE