கோவை:கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போருக்கு, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு, 130 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். துடியலுார், வெள்ளக்கிணறு, சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி ஆகிய பகுதிகளில், ஒரு நபருக்கு, நாளொன்றுக்கு, 70 லிட்டர் குடிநீரே, 6 முதல், 8 நாட்கள் இடைவெளியில் வழங்கப்படுகிறது.இனி, இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில், 'அம்ரூட்' திட்டத்தில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனத்தினருக்கு, புதிய பிரதான குழாயில் இருந்து, இணைப்பு வழங்கப்படுகிறது.துடியலுார் சுப்ரமணியம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில் ஆய்வு செய்த கமிஷனர், குடிநீர் பணிக்காக தோண்டிய இடங்களில், குழாய்கள் பழுதடைந்துள்ளதா என சரிபார்க்க வேண்டும்; கசிவு ஏற்படாத வகையில் சீரமைத்து, குழிகளை மூட வேண்டுமென, அறிவுறுத்தினார்.அதன்பின், தடாகம் ரோடு, பெரியசாமி சாலை, திருவேங்கடசாமி ரோடு, டி.பி., ரோடு, பொன்னுரங்கம் ரோடு ஆகிய பகுதிகளில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், மீட்டர் பொருத்தும் பணியை பார்வையிட்டார். குழாய் பதித்த பகுதிகளில், உடனடியாக தார் ரோடு போட, பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE