பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு காதல் ஜோடி ஹிந்து முறைப்படி திருமணம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
மரக்காணம்:வெளிநாட்டு காதல் ஜோடி, ஹிந்து முறைப்படி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் பகுதியில் வசிக்கும் பெண் யான்லுசி, 40. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், ஆரோவில்லில் பன்மொழி பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.மையத்தில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அரோர் மொபலட், 38, மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
 வெளிநாட்டு காதல் ஜோடி ஹிந்து முறைப்படி திருமணம்

மரக்காணம்:வெளிநாட்டு காதல் ஜோடி, ஹிந்து முறைப்படி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் பகுதியில் வசிக்கும் பெண் யான்லுசி, 40. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், ஆரோவில்லில் பன்மொழி பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.மையத்தில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அரோர் மொபலட், 38, மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும், ஓராண்டாக காதலித்து வந்தனர். ஹிந்து முறைப்படி, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி, இருவருக்கும், வானுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பதிவு திருமணம் நடந்தது. பின், வானுார் அடுத்த கொடூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில், ஹிந்து முறைப்படி மணமகள் யான்லுசி, மணமகன் அரோர் மொபலட் ஆகியோர், பட்டு புடவை, பட்டு வேஷ்டி அணிந்து வந்தனர்.கோவில் வளாகத்தில் குருக்கள் மந்திரம் ஓத, தாலி கட்டி, மெட்டி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு, ஹிந்து கலாசாரம் அடங்கிய புத்தக கையேடுகளை பரிசாக வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X