சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமக்கும் அவலம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
பெரம்பலுார்:அரியலுார் அருகே, இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை, மயானத்திற்கு துாக்கி சென்றனர். அரியலுார் மாவட்டம், கழுவந்தோண்டி கிராமத்தில், நைனார் ஏரி உள்ளது. 64 ஏக்கர் பரப்பளவு ஏரிக்கு அருகில் உள்ள மயானத்திற்கு செல்ல தனி பாதை இல்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது, இடுப்பளவு தண்ணீரில், சடலத்தை சுமந்து செல்லும் அவலம் உள்ளது.கடந்த ஆண்டு, மூதாட்டியின் உடலை அடக்கம்

பெரம்பலுார்:அரியலுார் அருகே, இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை, மயானத்திற்கு துாக்கி சென்றனர்.

அரியலுார் மாவட்டம், கழுவந்தோண்டி கிராமத்தில், நைனார் ஏரி உள்ளது. 64 ஏக்கர் பரப்பளவு ஏரிக்கு அருகில் உள்ள மயானத்திற்கு செல்ல தனி பாதை இல்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது, இடுப்பளவு தண்ணீரில், சடலத்தை சுமந்து செல்லும் அவலம் உள்ளது.கடந்த ஆண்டு, மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய, இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்றதை அறிந்த கலெக்டர், நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, 'மயானத்திற்கு செல்ல தனி பாதை அமைத்து தரப்படும்' எனக் கூறி சென்றவர், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது, மழை பெய்து வருவதால், ஏரியில் தண்ணீர் அதிகளவில் உள்ளது. நேற்று, கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், 80, என்பவர் வயது முதிர்ச்சியால் உயிரிழந்தார். நேற்று மாலை, 5:00 மணியளவில், இடுப்பளவு தண்ணீரில், ராமலிங்கத்தின் சடலத்தை துாக்கிச் சென்றனர்.

கிராம மக்கள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில், இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 'மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X