எவரெஸ்ட் மலைச்சிகரம் 86 செ.மீ., உயர்ந்துள்ளது: சீனா, நேபாளம் அறிவிப்பு

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பீஜிங்: நம் அண்டை நாடுகளான, சீனா மற்றும் நேபாளம் கூட்டாக நடத்திய ஆய்வில், எவரெஸ்ட் மலைச் சிகரம், 86 செ.மீ., உயர்ந்துள்ளது. அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர்.இந்தியாவின் வடக்கே உள்ள இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம், உலகிலேயே மிகவும் உயர்ந்த மலைசிகரமாக உள்ளது. கடந்த, 1954ல், இந்தியா நடத்திய ஆய்வில், இதன் உயரம், 8,848 மீட்டர் என, தெரியவந்தது. இந்நிலையில், பல்வேறு இயற்கை மாற்றங்கள்
Mount Everest, China, Nepal, survey, Mt Everest, Everest, higher,

பீஜிங்: நம் அண்டை நாடுகளான, சீனா மற்றும் நேபாளம் கூட்டாக நடத்திய ஆய்வில், எவரெஸ்ட் மலைச் சிகரம், 86 செ.மீ., உயர்ந்துள்ளது. அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர்.

இந்தியாவின் வடக்கே உள்ள இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம், உலகிலேயே மிகவும் உயர்ந்த மலைசிகரமாக உள்ளது. கடந்த, 1954ல், இந்தியா நடத்திய ஆய்வில், இதன் உயரம், 8,848 மீட்டர் என, தெரியவந்தது. இந்நிலையில், பல்வேறு இயற்கை மாற்றங்கள் மற்றும் 2015ல் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, கருதப்பட்டது.


latest tamil news



இதையடுத்து, சீனா மற்றும் நேபாளம் இணைந்து கூட்டாக, உயரத்தை அளவிடும் பணியை துவக்கின. புதிய உயரத்தை, சீனா மற்றும் நேபாளம் அறிவித்துள்ளன. இதன்படி, அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர். ஏற்கனவே, இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்த அளவை விட, தற்போது, 86 செ.மீ., அதிகரித்துள்ளது.

சீனா இதற்கு முன், இரண்டு முறை, எவரெஸ்டின் உயரத்தை அளந்துள்ளது. கடந்த, 1975 ஆய்வின்படி, 8,848.13 மீட்டராகவும், கடந்த, 2005ல் நடத்திய ஆய்வின்படி, 8,844.43 மீட்டராகவும் அறிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-202013:48:07 IST Report Abuse
ஆரூர் ரங் விருத்தகிரியும் வளர் மலை தான்
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-டிச-202013:00:42 IST Report Abuse
Rafi பூமியின் ஓரத்திலிருந்து குறைந்து வருகின்றதே விளங்கிக்கொள்ள மாட்டார்களா? அவர்கள் யாரை வணங்குகின்றார்களோ, அவர்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது, அந்த ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்து சென்றாலும் அவர்களால் திரும்ப பெறமுடியாது, என்று அல்லாஹ் திரு குர்ஆனில் உதாரணத்திற்காக கூறுகின்றான், பிரபஞ்சம் ஒவ்வொன்றும் சுழன்று கொண்டே இருக்கின்றது, எறும்பும், மலைகளும் பேசுகின்றது,( சில ஆண்டுகளுக்கு முன் தான் எறும்பு பேசுவதை ஆராய்ச்சியின் மூலம் அறிந்தோம்.) மலைகளும், ஒவ்வொரு உயிரினங்களும், பூமியையும், வானங்களையும் எவ்வித உதாரணமின்றி படைத்து பாதுகாக்கின்ற அல்லாஹ்வையே வணங்குகின்றது என்று கூறுகின்றான். விளங்கி கொள்ள மாட்டார்களா? தூண்களிலின்று சுழன்று கொண்டிருக்கும் பிரபஞ்சங்களை (வானங்களை) எவ்வாறு நான் படைத்துள்ளேன் என்பதை என்றும் தெளிவுபடுத்தியுள்ளான்.
Rate this:
09-டிச-202013:47:11 IST Report Abuse
ஆரூர் ரங்மொத்தம் எவ்வளவு வானங்கள் இருப்பதாக குராஅன் சொல்கிறது ? கேட்கவே இன்டரெஸ்டிங்...
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
09-டிச-202010:55:38 IST Report Abuse
S.Ganesan வெட்டி வேலை செய்வதில் பலரும் உள்ளனர் என்பது தெளிவாகிறது. இத்தனை உயர மலையை அளந்து வளைந்து விட்டது , வளர்ந்து விட்டது என்று சொல்வதன் பயன் என்ன ? புரியவில்லை. மேலும் இது போன்ற வேலை செய்யும்போது அதில் அனுமதிக்கப்பட்ட பிழை (allowed error) என்பது உண்டு. அதை கணக்கில் கொள்ளும்போது இந்த 86 செமீ அளவு பிழையாக கூட கொள்ளலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X