நாகப்பட்டினம்:நாகையில், மேற்பார்வையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்திய, 'டாஸ்மாக்' மேலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இயங்கும் டாஸ்மாக் கடைகள், தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மேலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன.மேலாளராக பணியாற்றும் அம்பிகாபதி, ஒவ்வொரு மாவட்டத்திலும், டாஸ்மாக் கடைகளில் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருவதாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நாகை மாவட்டத்தில், 45 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களை, நாகை, ஓய்வூதியர் சங்க கட்டடத்திற்கு நேற்று வரவழைத்த அம்பிகாபதி, அவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அம்பிகாபதியிடம் இருந்து, 2 லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய், அவரது அலுவலக உதவியாளர் மனோகரனிடம், 79 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE