உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தி, விவசாயத்தில் புரட்சி செய்து வரும், வேளாண் பல்கலைகழகங்களில், அகில இந்திய அளவில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது, நம் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை. வரும் புத்தாண்டில், ஏழு தோட்டக்கலை பயிர், காய்கறி பயிர் ரகங்கள், ஏழு பயிர்ரகங்கள், ஒரு மரப்பயிர் என மொத்தம், 15 பயிர் ரகங்களை வெளியிடப்போவதாக கூறுகிறார், இப்பல்கலையின் துணைவேந்தர் குமார்.அதிக வேளாண் உற்பத்திக்கு, விவசாயிகளுக்கு என்னென்ன ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன?புதிய ரகங்கள், பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு, அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள், காளான், கோழி வளர்ப்பு, விதை உற்பத்தி, மண்புழு உரத்தயாரிப்பு, தேனீ வளர்ப்பு, வேளாண் பயிர்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகியவை குறித்த, தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. விவசாயம் சார்ந்த அனைத்து தொழில் நுட்பங்களையும், பல்கலை இணையதளத்தில், தமிழில் விவசாயிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.வரும் தைத்திருநாளில், எத்தனை பயிர் ரகங்கள் வெளியிடப்படவுள்ளன?ஏழு வகை பயிர் ரகங்கள், தோட்டக்கலை மற்றும் காய்கறி பயிர்களில் ஏழு வகை மற்றும் ஒரு மரப்பயிர் என்று மொத்தம், 15 வகை பயிர்களில் இறுதிக்கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட உயர்மட்டக்குழு மற்றும் மாநில அரசு வெளியீட்டுக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, புதிய ரகங்கள் வெளியிடப்படும். இந்த ஆண்டில் விவசாயம் செழுமையாக நடக்க உதவும், பத்து வகை தொழில் நுட்பங்களை வெளியிடவும் ஆராயப்பட்டு வருகிறது.நவீன தொழில் நுட்பங்களுக்கு, விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா?பயிற்சிகள், கண்டுனர் சுற்றுலாக்கள், பயிலரங்குகள், நாளிதழ்கள், ரேடியோ, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் குறித்து, தக்க விளக்கம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள்உற்சாகத்துடன் பங்கேற்று தெரிந்து கொள்கின்றனர்.மழையும் விலையும் கை கொடுத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்.அகில இந்திய அளவில் ஐ.சி.ஏ.ஆர்., தரவரிசையில், தமிழ்நாடு வேளாண் பல்கலையின் நிலை என்ன?தமிழ்நாடு வேளாண் பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 2017ம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வருகிறது. 2019ம் ஆண்டு பங்கேற்ற 60 பல்கலைகளில், தமிழ்நாடு வேளாண் பல்கலை, 33 இடத்தை பெற்றது. தற்போது எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.விவசாயம் சார்ந்து, இளைய தலைமுறை விவசாயிகளின் புரிதல் எப்படி உள்ளது?இன்றைய இளைய தலைமுறையினர், விவசாயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக, இயற்கை சார்ந்த விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பண்ணை தொழில்களை செய்வதற்கு, தயாராக இருக்கின்றனர். ஆனால், முதலீடு செய்ய தேவையான நிதிவசதி குறைவாக உள்ளது. ஆர்வமுள்ளவர்களுக்கு, வங்கி வாயிலாக நிதி ஆதாரம் கிடைக்க செய்தல், தொழில் நுட்ப பயிற்சி அளித்தல் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE