ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தை கடந்து கோல்கட்டாவுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையின் இரு ரோந்து கப்பல்கள் சென்றன.
மேற்குவங்கம் - வங்க தேசம் இடையேயுள்ள நீர்வழி எல்லை பகுதியை பி.எஸ்.எப்., வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். அங்கு கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன ரேடார், தகவல் தொழில்நுட்ப கருவிகள், உயர்ரக தானியங்கி துப்பாக்கிகள், 20 வீரர்களுடன் ரோந்து செல்லும் வசதியுடன் கூடிய இரு ரோந்து கப்பல்கள் கோவாவில் கட்டப்பட்டன.
கோவாவில் இருந்து இருகப்பல்களும் பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து கோல்கட்டா துறைமுகம் சென்றன. இவற்றில் இரு கமாண்டர்கள் உள்ளிட்ட 27 பி.எஸ்.எப்., வீரர்கள் சென்றனர்.
வாரணாசி சென்ற படகு:
உ.பி., வாரணாசியில் கங்கை நதியில் சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து துவக்கப்பட உள்ளது. இதற்காக கேரளா கொல்லத்தில் தயாரிக்கப்பட்ட படகும் நேற்று பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE