திருப்பூர்,:ஓய்வூதியம் பெறுவோர், வரும் 31ம் தேதிக்குள் ஆயுள் சான்று அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்றுவரும் தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற ஓய்வூதியதாரர்கள், 2020- 21ம் ஆண்டுக்கான ஆயுள் சான்றை, இம்மாதம், வரும் 31ம் தேதிக்குள் வழங்கவேண்டும்.ஆயுள் சான்று அளிக்க வரும்போது, வங்கி பாஸ்புக் நகல், ரேசன் கார்டு, ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்கவேண்டும். திருப்பூர், காமராஜ் நகர் முதல் வீதி, பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இயங்கிவரும் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் விவரங்களை நேரில் அளிக்கவேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 0421 2477276 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE