திருப்பூர்:வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்திருந்தால், அவர்களை அப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பல்வேறு தொகுதிகளில், வரைவுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் பலர், வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்திருந்திருப்பது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கள விசாரணையில் தெரியவந்துள்ளது.தொழில் நிறுவனங்கள் நிறைந்த தொகுதிகளில், புதிதாக அங்கு குடிபெயர்ந்தவர்களும், ஊரடங்கு நேரத்தில், தங்கள் சொந்த ஊருக்கு குடிபெயர்ந்து இதுவரை பணிபுரிந்த இடங்களுக்கு திரும்பாதவர்களும் அதிகளவில் உள்ளனர்.சில தொகுதிகளில், குடியிருப்புகள் இடிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில், வசித்துவந்தவர்கள் பலர், அதே முகவரியில் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.இதுபோல், குடியிருப்பு இடம்பெயர்ந்தவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, வாக்காளராக தங்கள் பெயரை பதிவு செய்துகொள்வது அவசியம். குடியிருப்பு இடம் பெயர்ந்தோர், தங்கள் இருப்பிட ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால், அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE