சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பனியன் நிறுவனம் முன் கட்சியினர் போராட்டம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
திருப்பூர்:வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத பனியன் ஏற்றுமதி நிறுவனத்தை தொழிற் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் திருப்பூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூரில் நேற்று பனியன் தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கின. அங்கேரிபாளையம் ரோடு, காதர் காலனி பகுதியில், ஒரு நிறுவனம் வழக்கம் போல் இயங்கியது. தகவலறிந்த, தி.மு.க., உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சியினர்

திருப்பூர்:வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத பனியன் ஏற்றுமதி நிறுவனத்தை தொழிற் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் திருப்பூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூரில் நேற்று பனியன் தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கின. அங்கேரிபாளையம் ரோடு, காதர் காலனி பகுதியில், ஒரு நிறுவனம் வழக்கம் போல் இயங்கியது. தகவலறிந்த, தி.மு.க., உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் நிறுவனம் முன் திரண்டு, நிறுவனத்தை மூட வேண்டும் என வலியுறுத்தினர்.நிர்வாகம் சார்பில் பிரதிநிதிகளை அழைத்து நீண்ட நேரம் பேச்சு நடந்தது. ஆனால், பணிக்கு வந்த தொழிலாளர்களை திரும்ப அனுப்ப நிர்வாகத் தரப்பில் மறுக்கப்பட்டது. இதனால், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிறுவனம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X