பெருமாநல்லுார் - ஈரோடு ரோடு, 2 கி.மீ., தொலைவில் குன்னத்துார் செல்லும் பிரிவில், போடப்பட்டிருந்த, 5 வேகத்தடைகள் கடந்த, பிப்., 2019 பிரதமர் மோடி வருகையின் போது அகற்றப்பட்டன. அதன்பிறகு இதுவரை அப்பகுதியில் வேகத்தடை போடப்படவில்லை. விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.- கே.செல்வராஜ், திருப்பூர்.தெருவிளக்கு எரிவதில்லைரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள குமரன் சிலை பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்கு பல நாட்களாக எரிவதில்லை. பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சமூக விரோத செயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.- எம்.கார்த்திக், திருப்பூர்.அலைக்கழிப்புகாங்கயம் ரோடு, ஆர்.வி., நகர், 3வது வீதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வினியோகிக்கப்படுவதில்லை. எப்போது சென்றாலும் மிஷின் கோளாறு என, பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர்.-எஸ்.ஏ.பாலு, திருப்பூர்.குப்பை குவியல்15 வேலம்பாளையம், ஜவஹர் நகரில் குப்பைகள் ரோட்டிலே கொட்டப்படுகின்றன. துப்புரவு பணியாளர்கள் சரிவர அள்ளாததால் குப்பை குவியலாக காணப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.தனராஜ், 15 வேலம்பாளையம்.நெரிசலான ரோடுதிருப்பூர் பேப்ரிக்கேஷன் ரோட்டில் இடையூறாக லாரிகள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதர வாகனங்கள் செல்ல இடமில்லை. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.- என்.பாலன், திருப்பூர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE