திருப்பூர்:உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில், 19 மற்றும் 20ம் தேதியில், காலை, 9:00 முதல், மாலை, 4:00 வரை, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.வேலை தேடிக்கொண்டிருப்பவர், நேரில் சென்று, கல்வி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.முகாம் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், முகாம் ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.கலெக்டர் விஜயகார்த்திகேயன் பேசியதாவது:எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் முதல், முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி படித்தவர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டிரைவர், டெய்லர் என, தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பை பெற்றத்தர வேண்டும்.அயல்நாட்டு நிறுவன வேலை வாய்ப்புக்கான பதிவு செய்யும் வசதியையும் செய்ய வேண்டும். முகாமிற்கு வருவோர், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கும் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும்.மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் கடன் திட்டங்கள் குறித்த வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும். இளைஞர்கள், வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE