திருப்பூர்,:'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இடுவாய் அருகே உள்ள, வஞ்சிபாளையத்தில், 1,440 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' சார்பில், 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, வெற்றியை நிலைநாட்டியுள்ளனர். அதற்கு பின்னரும், பருவமழையை அறுவடை செய்யும் நோக்கில், மரக்கன்று நடும் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இடுவாய் அடுத்த, வஞ்சிபாளையம் கோகுலம் கார்டனில் நடந்த, 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தின், 90 வது நிகழ்ச்சி, நேற்று நடந்தது. பருவமழை துாறலுடன் நடந்த நிகழ்ச்சியில், 1,440 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள், 10 இலுப்பை, ஒரு நாட்டு அத்திமரக்கன்றுகள் என, 1,451 மரக்கன்றுகள் நடப்பட்டன.நில உரிமையாளர் பாலசுப்பிரமணியம், லோகநாயகி, நாகராஜன், சபரீஸ்வரன், பிரகதீஸ்வரன், முத்துக்குமரன், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.இத்திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE