பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் கடைகள் அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை!

Added : டிச 09, 2020
Share
Advertisement
டில்லி எல்லையில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று திருப்பூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பனியன் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின.திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், ஏறத்தாழ, 500 போலீசார் மற்றும் புறநகரில், 500 போலீசார் வீதம், என ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள

டில்லி எல்லையில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று திருப்பூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பனியன் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின.திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், ஏறத்தாழ, 500 போலீசார் மற்றும் புறநகரில், 500 போலீசார் வீதம், என ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்களும், மினி பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. இவற்றில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. கார், பைக் போன்ற வாகனங்கள் அனைத்து ரோடுகளிலும் வழக்கம் போல் காணப்பட்டது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கோர்ட்டுகள், வங்கிகள், டாஸ்மாக் மதுக்கடை வழக்கம் போல் இயங்கின. வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை வழக்கம் போல் இயங்கியது. ஆனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. தென்னம்பாளையம் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட் கடைகள் இயங்கவில்லை. காலையில் திறந்திருந்த சில கடைகளை, தி.மு.க.,வினர் அடைக்குமாறு வலியுறுத்தினர்.  பல்லடத்தில் தினசரி மார்க்கெட், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மட்டும் பேக்கரி, ஓட்டல் திறந்திருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை வழக்கம்போல் செயல்பட்டன. பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. அவிநாசி, திருமுருகன்பூண்டி, கருவலுார், சேவூர், பெருமாநல்லுார், குன்னத்துார் உட்பட பகுதிகளில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் உட்பட வாகன போக்குவரத்து வழக்கம்போல இருந்தது. வெள்ளகோவிலில் நேற்று மருந்துக்கடை, பால் விற்பனை கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மாலை, 3:00 மணிக்கு மேல், பேக்கரி, மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது - நமது நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X