புதுடில்லி:விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு இன்று ஆறாம் சுற்று பேச்சு நடத்த உள்ள நிலையில், விவசாய சங்கங்களின் தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சந்தித்தனர்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போரட்டத்துக்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நடந்திய ஐந்து சுற்று பேச்சு, வெற்றி பெறவில்லை. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு, இன்று ஆறாம் சுற்று பேச்சு நடத்த உள்ளது.
இந்நிலையில், விவசாய சங்கங்களின் தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நேற்றிரவு சந்தித்தனர். இந்த சந்திப்பு, அமித் ஷா வீட்டில் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், புசா என்ற பகுதியில் நடந்தது.அமித் ஷாவுடனான சந்திப்பின்போது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு பேரும், மற்ற மாநிலங்களளை சேர்ந்த ஐந்து பேரும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, மத்திய விவசாய அமைச்சர் தோமர், உணவு அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE